ADVERTISEMENT

ஆலங்குடி அண்ணா சிலை அருகே கலைஞர் படம் அடக்கம்! தொண்டர்கள் அஞ்சலி!

11:43 PM Aug 08, 2018 | bagathsingh

ADVERTISEMENT

திமுக தலைவர் கலைஞரின் மறைவு கட்சிகளை கடந்து அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அண்ணாவின் தம்பி கலைஞரின் உடலை அண்ணாவின் அருகில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் கொடுக்க மறுத்ததால் பல்வேறு கட்சி தலைவர்களும் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றனர். திமுக வினர் ஆங்காங்கே சாலை மறியல் செய்தனர்.

ADVERTISEMENT


கலைஞரின் வசனத்தில் பராசக்தியில் நீதிமன்றம் சென்ற வழக்கை போல வித்தியாசமான வழக்காக உயர்நீதிமனறம் போனது மெரினாவில் கலைஞர் துயில இடம் கேட்ட வழக்கு. நீதியரசர் கடைசி நேரத்தில் அண்ணாவின் அருகி்ல் தம்பி துகில தடையில்லை என்று தடையை உடைத்தார். துயரத்திலும் பட்டாசு வெடித்தார்கள் உடன்பிறப்புகள்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் கீரமங்கலம் உள்ளிட்ட கிராமம் நகரம் என்று பந்தல் அமைத்து கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் மாலை வரை காத்திருந்து ஊர்வலம் நடத்தினார்கள்.

சிலட்டூர் கிராமத்தில் அப்பகுதி கிராம வழக்கப்படி கலைஞரின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை சட்டை கழட்டி இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு இரு கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க அஞ்சலி செலுத்த வந்த உறவுகள் கை கழுவி துயரத்தில் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தினார்கள். மாலையில் கலைஞரின் படத்துடன் ஊர்வலம் நடத்தி அண்ணா சிலை அருகே கலைஞர் படத்தை அடக்கம் செய்தனர். அண்ணாவின் தம்பிக்கு அண்ணா சிலை அருகே சிலை எழுப்புவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு களைந்து சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT