ADVERTISEMENT

’’குருவின் சகோதரி காடுவெட்டியில் பேசிய ஒரு சில நிமிட வார்த்தைகள்தான் அந்த கும்பலை கதிகலங்க வைத்து...’’-வேல்முருகன் விளக்கம்

09:15 PM Mar 31, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது கட்சியில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இது குறித்து வேல்முருகன் பேசியபோது, ‘’முத்துலட்சுமின் தந்தை என் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர். சேலம் மாநாட்டில் அவர் பேசிய பேச்சு இன்னும் நமது இணையதளத்தில் இருக்கிறது.

’நீ தனி இயக்கம் நடத்தக்கூடாது. வேல்முருகனோடுதான் இணையவேண்டும்’ என்று முத்துலட்சுமியிடம் அவரது தந்தை அறிவுருத்தி வந்தார். ’உங்களுக்கு எப்ப தோணுதோ. அப்ப வாங்க. நான் உங்கள கட்டாயப்படுத்தல’ என்று முத்துலட்சுமியிடம் நானும் சொல்லியிருந்தேன். இப்போது வந்து இணைந்துள்ளார்.

அதே மாதிரி, காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தனது சகோதரனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எதிராக ராமதாஸ் மற்றும் ஜிகே மணி ஆகியோர் இழைத்த அநீதிக்கு பாடம் புகட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார். குருவின் சகோதரி காடுவெட்டியில் பேசிய ஒரு சில நிமிட வார்த்தைகள்தான் அந்த கும்பலை கதிகலங்க வைத்து, குருவின் குடும்பத்தையே எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு கொண்டு போனது. கடைசியில் நமது பாதுகாப்பின் காரணமாக, அவர்களை தொட முடியவில்லை. அதன்பிறகு குருவின் குடும்பம் வந்தால் ஏற்றுக்கொள்ளத்தயார்; உதவி செய்யத்தயார் என்று ராமதாஸ் அறிக்கை விட்டுப்பார்த்தார்.

குருவின் சகோதரி தனது குடும்பத்தினருடன் என் இல்லத்திற்கு வந்தார். ‘இப்போதே பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் உங்கள் கட்சியில் இணைகிறோம்’என்று சொன்னார்.


நான் அதற்கு மறுத்து, முதலில் உங்கள் குடும்பத்தை அந்த கும்பலில் இருந்து பாதுகாக்க வேண்டும். இனியும் ஒரு துரும்பு கூட உங்கள் மீது விழாமல் பார்த்துக்கொள்ளும் கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்று சொல்லிவிட்டு, டிஜிபியை சந்தித்து குருவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கேட்டு அதை ஏற்படுத்திக்கொடுத்துவிட்ட பின்னர்தான் இன்று என்கட்சியில் சேர்த்துக்கொண்டேன்’’என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT