ADVERTISEMENT

ஆய்வுக்கு வந்த ஜோதிமணி எம்.பி. - கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலர்

03:03 PM Nov 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாநகராட்சியை ஒட்டிய காதப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெண்ணைமலை பாலதண்டாயுதபானி கோவில் முன்புறம் கடந்த அதிமுக ஆட்சியில், சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா கட்டப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்தப் பூங்கா திறக்கப்படாமல் பூட்டியே இருக்கிறது.

இந்நிலையில் இப்பூங்கா திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பஞ்சாயத்துத் தலைவர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், பூங்கா பராமரிப்புக்கு ஆகும் தொகையை யார் கொடுப்பது என்றும், அதற்கான ஓப்பன் டெண்டர் வைக்கப்பட்டும் ஒருவர் கூட வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பூங்காவை எம்.பி ஜோதிமணி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த அதிமுகவினர், ‘எங்கள் ஆட்சியில் நாங்கள் கட்டியது. இந்த பூங்கா பூட்டப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வராமல் தற்போது எதற்காக வந்தீர்கள்’ எனக் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பிறகு பூங்காவின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்கேயும் வந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தமிழ், தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக ஜோதிமணி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்தும் கிளம்பிச் சென்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT