ADVERTISEMENT

நீதிபதிகளுக்கு கரோனா! ஆத்தூர் நீதிமன்றத்திற்கு 3 நாட்கள் விடுமுறை!!

10:32 PM Jul 14, 2020 | rajavel

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூன்று நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் 44 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அங்குள்ள 5 நீதிமன்றங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகளின் குடியிருப்பும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரையின்படி, மூன்று நாட்கள் நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் (ஜூலை 13) முதல் இன்று (ஜூலை 14) வரை மூன்று நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நாளை (வியாழக்கிழமை) முதல் ஆத்தூர் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படும் என நீதிமன்ற வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT