Skip to main content

தங்கையைக் காதலித்ததால் ஆத்திரம்; வாலிபரை அடித்தே கொன்ற அண்ணன்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

salem district attur youth incident police investigation


ஆத்தூரில், தங்கையை ஒருதலையாகக் காதலித்து வந்த இளைஞரை, அண்ணன் சரமாரியாக எட்டி உதைத்ததில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படித்தை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார். இவர், சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். 
 


எதிரில் மோட்டார் சைக்கிளில் சிமெண்ட் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்த இளைஞர் ஒருவர், திடீரென்று அருண்குமாரை வழிமறித்து கையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அருண்குமார், கீழே சரிந்து விழுந்தார். ஆனாலும் அவரை விடாமல் நெஞ்சு, வயிற்றுப்பகுதியில் அந்த இளைஞர் சரமாரியாக உதைத்துள்ளார். தாக்கிய இளைஞருடன் வண்டியில் வந்த மற்றொரு நபரும், சம்பவ இடத்தில் இருந்த சிலரும் அவர்களை விலக்கி விட்டுள்ளனர். 

இதையடுத்து தாக்கப்பட்ட அருண்குமார் வீட்டிற்குச் சென்று எதுவுமே நடக்காததுபோல் படுத்துத் தூங்கியுள்ளார். உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால் அவர் மீது பெற்றோருக்கும் சந்தேகம் எழவில்லை. இதைப்பற்றி பெற்றோரிடம் சொன்னால் விவகாரம் வேறு மாதிரி ஆகிவிடும் எனக்கருதி அருணும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மாலையில் அவர், திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதாகத் தந்தையிடம் கூறவும், அவர் அருண்குமாரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தபிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 06.45 மணியளவில் சிகிச்சை பலனியின்றி அருண்குமார் உயிரிழந்தார். 
 

 


இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் உமாசங்கர், எஸ்ஐ நிர்மலா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அருண்குமாரின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணையில், அருண்குமாரை தாக்கியவர் ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்பது தெரிய வந்தது. சதீஸின் சித்தப்பா தங்கதுரை. கொலையுண்ட அருண்குமார், சதீஸின் தங்கை முறையான தங்கதுரை மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

தங்கை மீதான ஒருதலைக்காதலை உடனடியாக கைவிடுமாறும், இது ஊருக்குத் தெரிந்தால் எல்லோருக்கும் மானம் போய்விடும் என்றும் சம்பவத்தன்று சதீஸ் எச்சரித்துள்ளார். அதற்கு அருண்குமார் மறுத்ததால்தான் ஆத்திரத்தில் அருண்குமார் அவரை கையால் தாக்கியும், காலால் சரமாரியாக எட்டி உதைத்து தாக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. மருத்துவர்கள் பரிசோதனையில் சதீஸ்குமார் தாக்கியதில், அருண்குமாரின் மண்ணீரல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால்தான் அவர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
 

http://onelink.to/nknapp


இச்சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலைக்குக் காரணமான சதீஸ் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு; ஆத்தூரில் சோகம்

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

'One and a half year old child lost their live in bus collision; Tragedy in Attur

 

தனியார் பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

 

சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது மகள் வினிதா மற்றும் பேரன் நிதின் (ஒன்றரை வயது) உள்ளிட்டோருடன் வாழப்பாடி அருகே உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார். கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஆத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஜெகதீசனும் வினிதாவும் கீழே விழுந்தனர். சிறுவன் நிதின் தூக்கி வீசப்பட்டான். படுகாயமடைந்த நிலையில் நிதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்தை அடித்து சேதப்படுத்தினர். உடனடியாக போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பேருந்து மோதி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.