ADVERTISEMENT

அரசு மேற்கொள்ளும் நிவாரணப்பணிகளை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி

05:52 PM Nov 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் நிவாரணப்பணிகளை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். நிவாரணப்பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT


ஒரே இரவில் அனைத்து பணிகளை மேற்கொள்ள முடியாது. மீட்பு பணிகள் முழுமையாக நடைபெறும் என நம்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தொடுத்த வழக்கில் மேற்கண்டவாறு கூறிய நீதிபதிகள், இவ்வழக்கை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT