ADVERTISEMENT

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்கள் ஊதியத்தை ஏன் உயர்த்தக்கூடாது??? -நீதிபதிகள்

09:30 PM Nov 02, 2018 | kamalkumar


ADVERTISEMENT

பணியின்போது உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தொழிலாளர்கள் ஊதியத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த்தக்கூடாது. தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையை ஏன் அதிகரிக்கக்கூடாது. என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 2010ல் மத்திய அரசு ரூ.8000 ஐ தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்தது, 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் அரசுகள் ஊதியத்தை உயர்த்தவில்லை. இந்த விஷயத்தில் அரசுகள் தவறிவிட்டன. தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் எனக்கூறும் தொழிற்சங்கங்களும் சில விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதுகுறித்து பதில் அளிக்க அரசுகளுக்கு உத்தரவிட்டு இந்த விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT