ADVERTISEMENT

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமையானது!

03:13 PM Jul 25, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது. தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகள் ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தமிழக அரசு தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தீபக் மற்றும் தீபா ஆகியோருடன் உடன்பாடு எட்டப்படாததால் நிலத்திற்கு சதுர அடிக்கு 12,060 வீதம் 24,322 சதுர அடிக்கு ரூ.29.33 கோடி தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தும்படி நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இழப்பீட்டுத் தொகையை அரசு செலுத்தியதன் மூலம் அந்த இல்லம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவு இல்லத்தை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக மாற்றலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT