ADVERTISEMENT

எந்த அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது? -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

06:10 PM Mar 02, 2020 | santhoshb@nakk…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலை எந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே சிலை அமைக்கக்கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி.செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முத்துராமலிங்கத் தேவர் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.



இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்கள், பூங்காக்கள், சாலைகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது, மாற்றியமைப்பது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் 2010- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ் - கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் சிலை எந்த அடிப்படையில் அங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT