ADVERTISEMENT

ஜெயலலிதாவும் ஜூலியும்! - வெளிவராத சுவாரஸ்யம்!

07:52 PM Feb 24, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

முரளி, கர்த்திக், பரணி, பத்மினி என்று நாய்களுக்கு ஜெயலலிதாவே செல்லப்பெயர்கள் சூட்டி அன்போடு வளர்த்தாலும் ஜூலிதான் ஜெயலலிதாவின் மிக மிக மிக செல்லமான நாய். அவரது அறையில்தான் இருக்கும் ஜூலி. எவ்வளவு டென்ஷன்கள் கோபங்கள் இருந்தாலும் ஜூலியுடன் கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டால் குழந்தைபோல் ஆகிவிடுவார் ஜெயலலிதா.

ADVERTISEMENT

ஒருநாள், அமைச்சர் செங்கோட்டையன் ஜெயலலிதாவை பார்க்க வந்தபோது, சோஃபாவில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அருகில் வந்தார். தனது செல்ல அம்மாவை செங்கோட்டையன் ஏதோ தாக்கப்போகிகிறார் என்று நினைத்த ஜூலி, அதிரடி பாதுகாப்பு நடைவடிக்கைகளில் ஈடுபவடுதாக நினைத்து செங்கோட்டையனின் வேட்டியை உருவிவிட்டது. செங்கோட்டையன் பதறிப்போய் நிற்க...யார் சொல்லியும் வேட்டியை திருப்பிக்கொடுக்காத ஜூலி... ஜெயலலிதா சிரித்துக்கொண்டே ஸ்ட்ரிக்டாக அன்புக்கட்டளையிட்ட பிறகுதான் வேட்டியை திருப்பிக்கொடுத்திருக்கிறது. அந்தளவுக்கு ஜெயலலிதாவின் மீது அன்பும் பாசமும் கொண்டது ஜூலி. அடுத்தடுத்து, ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்களின் கண்களில் பீதியும் மிரட்சியும் தென்பட்டிருக்கிறது, "வெளியில போனவன் விஷயத்தை சொல்லியிருப்பான் போல... கால்ல விழ வர்றவன்லாம் என்னை பார்க்கிறானுங்க... ஜூலியை பார்க்கிறானுங்க... கிட்ட வந்து காலில் விழலாமா வேண்டாமான்னு யோசிக்கிறானுங்க" என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் ஜெயலலிதா. அதுவும், ஜூலி இருந்தா இனிமே வெள்ளை பேண்டுத்தான் போட்டுக்கிட்டு உள்ள வருவானுங்க போலிருக்கு என்றும் கமேண்ட் அடித்தும் சிரித்திருக்கிறார் ஜெயலலிதா.

சசிகலாவின் நாய்தான் ஜூலி!

பொதுவாக, நாய்களுக்கு செல்லப்பெயர் சூட்டுகிறவர்கள் ஜிம்மி, ஜூலி என்றுதானே சூட்டுவார்கள்? ஆனால், ஜெயலலிதா சூட்டும் பெயர்கள் ஏற்கனவே தெரியும். அப்படியிருக்க, ஜெயலலிதாவின் செல்ல நாய்க்கு மட்டும் ஜூலி என்று எப்படி பெயர் சூட்டியிருப்பார்? என்கிற சந்தேகம் போயஸ்கார்டனிலுள்ள அத்தனை பேருக்கும் இருந்தது. ஆனால், ஒருநாள் சந்தேகம் விலகி அந்த நாய் சசிகலாவுடையது என்று கன்ஃபார்ம் ஆனது.

எப்படி தெரியுமா? ஒருநாள் சசிகலாவின் வைர மோதிரத்தை காணவில்லை. சசிகலா உள்ளிட்ட பணிப்பெண்கள் வீடு முழுக்க சல்லடை போடாத குறையாய் தேடிக்கொண்டிருக்க ஜூலி மட்டும் திரு திருவென்று முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கே டவுட் வந்து, ‘ஏன் ஜூலி மட்டும் திரு திருன்னு முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கு?’என்று சொல்ல, பக்கத்திலிருந்தவர்களும் ஆமாம் என்று ஆமோதிக்க கெட்-அப் ஜூலி என்றார் சசிகலா. ம்ஹூம் என்பதுபோல் முறைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்க... சந்தேகம் இன்னும் வலுக்க ஆரம்பித்தது. ஜூலி எழுந்திரு... அதட்டியும்கூட கம் போட்டு ஒட்டியதுபோல் ஜூலி உட்கார்ந்துகொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஜூலியை பிடித்து இழுத்தபோதுதான் வைர மோதிரத்தை எடுத்துவைத்துக்கொண்டு ஜூலி உட்கார்திருந்தது தெரிய வந்து போயஸ்கார்டனே சிரிப்பால் அதிர்ந்திருக்கிறது. வெளியில் உள்ளவர்களுக்குத்தான் சசிகலா சின்னம்மா. ஆனால், போயஸ்கார்டனிலுள்ள ஜெயலலிதாவின் விசுவாசிகள் வேறு பெயர் வைத்துதான் சசிகலாவுக்கு தெரியாமல் அழைத்துக்கொள்வார்கள். ஒருநாள் 100 ரூபாய் நோட்டையும் திருடிவைத்திருந்ததை பார்த்து, சசிகலாவின் நாய் என்பதை நிரூபித்துவிட்டது என்று சைலண்டாக சொல்லி சிரித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT