ADVERTISEMENT

ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள்,வீடுகளில் அதிரடி ஐடி ரெய்டு

08:49 PM Mar 06, 2019 | arulkumar

கோவையில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 500 கோடிக்கு மேல் கணக்கில் கட்டப்படாத ஆவணங்கள் மற்றும் பல கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் , கடந்த 15 வருடங்கள் மிக அதீத வளர்ச்சியை அடைந்தது. குறிப்பாக கோவை அவிநாசி சாலையில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியை துவங்கிய இந்நிறுவனத்தினர். அடுத்தபடியாக கோவை மாலுமிச்சம்பட்டி பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசி சாலையில் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் விவசாய நிலங்கள், ட்ராவல்ஸ் , மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வாங்கினர்.

ADVERTISEMENT

இந்நிலையில் , இன்று காலை 7.30. மணிக்கு கோவை அவிநாசி சாலை கல்லூரி, கல்லூரியின் தாளாளர் கண்ணையன் , அவரது மனைவி சரஸ்வதி கண்ணையன் , மகள் பிரியா உள்பட அனைத்து பகுதிகளுக்கும் 10 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர், இச்சோதனையில் 500 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் மற்றும் பலகோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, தற்போதும் சோதனைகள் தொடர்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT