ADVERTISEMENT

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்... தமிழ்நாடு அரசு உத்தரவு!

11:14 AM Jul 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு பதிவுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இணையவழியில் புகாரைத் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் பதிவேடு முறையைக் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் புகார் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த முடிவினை தமிழ்நாடு அரசு ஏற்றுப் புகார் பதிவேடு முறையைக் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணையவழியில் புகாரளிப்பதற்கான நடைமுறைகளும் அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நிவாரணப் பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட நிலையில், அதிகமாகக் கூட்டம் கூடுவதால் கைரேகை முறை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொற்று குறைந்ததால் அண்மையில் கைரேகை பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்குவந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT