ADVERTISEMENT

சைலேந்திரபாபு போல் இருப்பாரா ஆபாஸ்குமார்?

10:32 AM Jul 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சிறைத்துறை பணியாளர்களுக்கு 2019ம் வருடம் பொது பணியிடமாறுதல் எப்போதும் ஏப்ரல் மாதம் பொது பணியிட மாறுதல் நடைபெறும். காரணம் அதற்கு ஏற்றார் போல சிறைதுறை பணியாளர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

ADVERTISEMENT

ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் பணியிட மாறுதல் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது பணியிட மாறுதலுக்கான ஆணை போட இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு சிறைத்துறையில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் எந்த வித மறைமுகம் இல்லாமல் நேரடியாக பணியிட மாறுதல் கொடுத்தார். அதே போன்று தற்போது உள்ள ஆபாஸ் குமார் ஐபிஎஸ் ஏடிஜிபி அவர்களும் பணியாளர்களுக்கு கலந்தாய்வு வைத்து பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள்.

காரணம் சிறைத்துறை பணியாளர்கள் பணியிட மாறுதல், கலந்தாய்வு மூலம் நடைபெற்றால் பணம் வாங்கிவிட்டு பணியிட மாறுதல் போட முடியாது. நேர்மையான முறையில் பணியிட மாறுதல் நடக்கும். இல்லை என்றால் சீனியாரிட்டி படி பணியிட மாறுதல் கிடைக்காது. பணம் பத்தும் செய்யும். சீனியர் , ஜூனியர் எல்லோரும் பணியிட மாறுதல் கேட்டு இருக்கிறார்கள். முறையாக யாருக்கு பணியிட மாறுதல் கொடுக்கணுமோ அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதே போல் பணியிட மாறுதல் கேட்டு புதிதாக ஒரு சர்குலர் அனுப்பி விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஏடிஜிபி நேரடி பார்வையில் தகுதியான பணியாளர்களுக்கு பணியிட மாற்றுதல் வழங்க வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்றால் லட்ச கணக்கில் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் கேட்ட இடத்திற்கு பணியிட மாறுதல் கிடைக்கும்.

இன்னும் ஓரிரு நாளில் பணியிட மாறுதல் வழங்க இருக்கிறார்கள் . விதிமுறைப்படி தகுதியான நபருக்கு பணியிட மாறுதல் கிடைக்கணும். பணம் கொடுத்து பணியிட மாறுதல் வாங்குபவர்கள் அதை சரிக்கட்ட பெரிய அளவில் சிறைத்துறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கி சிறை நிர்வாகத்தை கெடுத்து விடுவார்கள் என்று ஆதங்கப்படும் சிறைப்பணியாளர்கள் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். போல் ஆபாஸ் குமார் ஐ.பி.எஸ். இருப்பாரா ? என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT