ADVERTISEMENT

விக்கிரவாண்டியில் நெடுஞ்சாலையோர உணவகங்களில் ஆய்வு!

08:03 AM Dec 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காக நிறுத்துகையில், பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும் என கடந்த அக்.10ஆம் தேதி அரசுப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியிருந்தது.

அரசு விரைவுப் பேருந்தின் கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு பொது மேலாளர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காகப் பேருந்துகளை நிறுத்தும்போது, பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும். இடதுபுறம் நிறுத்தாமல் எதிர்த் திசையில் உள்ள உணவகத்திற்கு வாகனத்தைத் திருப்பும்போது விபத்துகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம் பேருந்துகளை இடதுபுறம் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும். இதை மீறும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுபோன்ற நீண்ட பேருந்து பயணங்களின்போது இடையில் உணவு இடைவேளைக்காக நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் தரம் குறைந்திருப்பதாகவும், விலை அதிகரித்திருப்பதாகவும் பயணிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையில் தரமற்ற இட்லி மாவு, பரோட்டா மாவு உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT