ADVERTISEMENT

"சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

12:20 PM May 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டப்பேரவையில் இன்று (09/05/2022) 110 விதியின் கீழ் தொல்லியல் அகழாய்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தொடர்ந்து இந்தியாவின் பிற்பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்டது போல இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது. தமிழகத்தில் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாடு இருந்துள்ளது. கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையில் சேகரிக்கப்பட்ட இரும்பு கரிம மாதிரி அமெரிக்காவில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் 'Beta Analytical Laboratory'- ல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான் வனங்களை அளித்து வேளாண்மை செய்ய தொடங்கினர். இரும்பு கரிம மாதிரிகளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு.1615, கி.மு. 2172 எனத் தெரிந்துள்ளன. தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலத்திற்கான தெளிவான விடை கிடைத்துள்ளது. அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளை சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார்.

சிந்து சமவெளியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்திடும் திட்டம் இந்தாண்டு முதல் மேற்கொள்ளப்படும். தமிழர்கள் தடம் பதித்த இந்தியாவின் பிற பகுதிகளில் அகழாய்வுகள் இந்தாண்டு மேற்கொள்ளப்படும். கேரளா- பட்டணம், கர்நாடகா- தலைக்காடு, ஆந்திரா- வேங்கி, ஒடிஷா- பாலூரில் அகழாய்வு நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT