ADVERTISEMENT

நாட்டில் பொருளாதார நெருக்கடி- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

12:34 AM Nov 30, 2019 | santhoshb@nakk…

நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


எட்டு முக்கிய ஆதார தொழிற்துறைகளின் உற்பத்தி அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. முக்கியமாக எரிபொருள் உற்பத்தி துறையில் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6% குறைந்துள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக குறைந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி. மத்திய அரசு தனது பொருளாதார செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது" என குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT