ADVERTISEMENT

பெண்ணிடம் செல்ஃபோன் எண் கேட்ட ஊர்க்காவல் படை வீரர்... பயணிகள் மறியல்!

07:38 PM Aug 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பத்தூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்வதற்காகத் தனது தோழியுடன் பேருந்து நிலையத்திற்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வந்தாராம். அங்கு பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த சபரிநாதன் அந்த பெண்ணையே சுற்றி சுற்றி வந்ததாகவும், அவரது செல்ஃபோன் எண் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அந்தப்பெண் கொடுக்காததால் சபரி தன்னுடைய செல்ஃபோன் எண் அருகேயுள்ள இருசக்கர வாகனத்தின் சீட் கவர் மீது எழுதி வைத்து எனக்கு ஃபோன் செய் எனக்கூறினார் என்றும் கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அந்த பெண் பயந்து அலறி கூச்சலிட்டுள்ளார். அவரது அழுகுரலைக்கேட்டு கடைக்காரர்கள், சகப்பயணிகள் கூடி என்னவென கேட்டுள்ளனர். உடனே நடந்ததை அந்த பெண கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியானவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்ல, போலீஸார் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் பெண்ணுடன் சேர்ந்து சக பயணிகள் அந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த சபரிநாதனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்பே போலீசார் வந்து அந்தபெண்ணிடம் புகாரை பெற்றுள்ளனர். தலைமறைவான சபரிநாதன், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சேர்ந்தவர். இவர் 5 ஆண்டுகளாக வாணியம்பாடியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார் எனக்கூறப்படுகிறது. தலைமறைவானவரை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT