Skip to main content

சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் கீழக்கடையம்; கனிம லாரி சிறை பிடிப்பு

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

 Mineral truck imprisonment In thenkasi

 

தென்காசி மாவட்டத்தின் கீழக்கடையம் பகுதியில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெவி டைப் டாரஸ் லாரிகளில் அளவுக்கதிகமான டன் எடை கொண்டவை அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தவிர விதிகளுக்கு முரணாக அளவுக்கதிகமான அளவு கனிம கற்கள் தோண்டி எடுக்கப்படுவதால் குவாரிகளைச் சுற்றியுள்ள கீழக்கடையம் ஏரியாவின் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு விவசாயம் சீர்கேடாகியுள்ளது.

 

அத்துடன் அளவுக்கு அதிகமான அளவு லோடுகள் ஏற்றப்படுவதால் கீழக்கடையம் ரயில்வே சாலை சீர் கெட்டதுடன் நகரின் பொதுமக்களின் போக்குவரத்தும் இந்த கனிம லாரிகளால் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிப்பை உணர்ந்த பொதுமக்கள் ஊராட்சித் தலைவரான பூமிநாத் மற்றும் கடையம் பஞ்சாயத்து யூனியனின் கூட்டமைப்பு தலைவர்களுடன் இணைந்து ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பிப்.17 அன்று தலைவர் பூமிநாத் தலைமையில் கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கனிமங்களை ஏற்றி வந்த லாரியை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 Mineral truck imprisonment In thenkasi

 

இந்தப் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கவே சம்பவ இடம் வந்த எஸ்.ஐ. முப்பிடாதி உள்ளிட்ட போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கனிம லாரியை விடுவித்திருக்கிறார்கள். அதன்பிறகும் நடவடிக்கை இன்றிப் போகவே... கனிமக் கொள்ளையும் தொடர்ந்திருக்கிறது. இதனால் ஆத்திரமாகிப் போன பொதுமக்கள், பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கனிம லாரிகள் போகாதபடி கீழக்கடையம் ரயில்வே சாலையில் மிகப் பெரிய பள்ளம் தோண்டிவிட்டனர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

விதிக்கு முரணாக அளவுக்கதிகமாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுவதால் நீர் ஆதாரம் வற்றிப் போய் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரவு பகல் கணக்கில்லாமல் லாரிகளில் கனிமங்கள் வெளியேற்றப்படுவதால் சாலையும் சீர் கெட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அதிகாரிகளே துணை போவதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறார் ஊராட்சித் தலைவரான பூமிநாத். தொடர்புடைய காவல் சரகத்தின் மூன்று ஸ்டார் அதிகாரி கனிவும் கருணையும் காட்டுவதால் தான் கனிம லாரிகள் தடையின்றிப் பறக்கின்றன. எனவே அரசு தலையிட வேண்டும் என்கிறார்கள் கீழக்கடையம் வாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.