ADVERTISEMENT

கோவையில் தொழிலாளிகளின் கண்முன்னே முதலாளியை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

03:56 PM Apr 19, 2019 | arulkumar

இரண்டு லட்சம் ரூபாய் பணம், அவர் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகள் மற்றும் மூன்று கார்களை திருடிக்கொண்டு, கண்காணிக்காப்புக் கேமிரா காட்சிகளையும் அழித்துவிட்டு சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை பீளமேடு பகுதியைச்சேரந்தவர் பரந்தாமன்(36). கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை வைத்து நடத்துவபவரான இவர் கார்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (18-04-2019) காலை பாப்பநாயக்கன் பாளைத்திலுள்ள வாக்குசாவடியில் வாக்களித்து விட்டு தனக்கு சொந்தமான போத்தனூர் பகுதியல் இயங்கி வரும் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

சுமார் 11 மணி அளவில் பரந்தாமன் அலுவலகத்திலும், ஒரு பெண் தொழிலாளி மற்றும் இரு ஆண் தொழிலாளர்களும் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியை வைக்கவே தொழிலாளர்கள் பயத்தில் ஒரு அறையினுள் ஓட்டம் பிடித்தனர்.

அந்த அறையின் கதவை மூடிய கும்பல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டிருந்த பரந்தாதமனை சுற்றி வலைத்து தொழிலாளர்களின் கண்முன்னே அவர்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் பரந்தாமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பரந்தாமன் அணிந்திருந்த எட்டு பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களையும் ஓட்டிக்கொண்டு தப்பி சென்றனர்.


இதனையடுத்து தொழிலாளர்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடரந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போத்தனூர் காவல் துறையினர் மற்றும் மாநகர துணை காவல் ஆணையர் கொலையான பரந்தாமனின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வரும் போலீசார் கொலைக்கு முன்விரோதம் காரணமாக? அல்லது தொழில்போட்டியா? கொடுங்கல் வாங்கல் பிரச்சனையா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் கோவையில் தொழிலாளிகளின் கண்முன்னே முதலாளியை வெட்டி கொலை செய்து விட்டு மூன்று கார்களை கொள்ளைஅடித்த சம்பவம் பெரும் அதிரச்சியையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT