ADVERTISEMENT

சென்னை முகலிவாக்கத்தில் சாலையோர பள்ளத்தில் மின்சாரக்கம்பியை மிதித்த 14 வயது சிறுவன் பலி 

08:00 AM Sep 16, 2019 | kalaimohan

சென்னை முகலிவாக்கத்தில் மாநகராட்சியால் தோண்டப்பட்ட குழியில் நீட்டிக் கொண்டிருந்த மின்கம்பியை மிதித்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி சார்பில் இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு அப்பணிகள் நிறைவடையாமல் உள்ள நிலையில் பள்ளங்களை தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் மணல் நிரப்பி மூடி உள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மணல் சரிந்ததில் சாலைகளில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி நீட்டி கொண்டிருந்தது. நேற்று இரவு முகலிவாக்கம் தனம் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் தீனா அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது தெரியாமல் அந்த மின்சாரம் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT