ADVERTISEMENT

எதிர்காலத்தை மாற்றிய ஒற்றை வீடியோ... மனம்திறக்கும் திருமூர்த்தி!!

08:00 PM Sep 23, 2019 | kirubahar@nakk…

பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்த நிலையில், அதை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த இளைஞருக்கு தமது அடுத்த படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. தனது இனிமையான குரலால் விஸ்வாசம் திரைப்பட பாடலான 'கண்ணானே கண்னே' பாடலை பாடிய வீடியோவை அக்கிராமத்தை சேர்ந்த அஜித் மதன் எனும் இளைஞர் சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்த பதிவுதான் தற்போது இந்த விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றார் திருமூர்த்தி,பிறவியிலேயே கண்பார்வை அற்றவராக இருந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. பிறகு தொலைகாட்சியை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அதில் இசையை கேட்பதே தன்னுடைய பொழுதுபோக்காவும் இருந்துள்ளது. அதே போல தான் கேட்கும் பாடலை முழுமையாக பாடிப்பார்த்து பயிற்சியும் செய்துவந்துள்ளார் திருமூர்த்தி. இது காலப்போக்கில் அக்கிராமத்தின் இளைஞர்களிடம் பாடிகாட்டி வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் தட்டு, குடங்களில் இசை வாசித்து தானகாவே பாடலையும் பாடிவந்துள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி இளைர்கள் ஒரு தப்பு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். நொச்சிப்பட்டி கிராமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதில் கலந்துகொண்டு திரைப்பாடலை பாடி அசத்திவந்துள்ளார். அந்த கிராமத்ததில் திறமையை வெளிபடுத்துவது யாராக இருந்தாலும் அவர்களை ஊக்கபடுத்துவதே அக்ககிராமத்தின் பெருமையாக சொல்லாம்.

இந்த நிலையில் திருமூர்த்தியின் தாயார் சர்க்கரை நோயால் காலமான பிறகு தன் தந்தையுடனே வாழ்ந்து வந்தார். அவரின் பிரிவை மறக்கமுடியாத திருமூர்த்திக்கு அவருடைய பெரியப்பாவின் மகனான முரளி மனோகர் தன் தம்பி வாசிப்பதற்காக ஒரு கீபோர்ட் வாங்கித்தந்துள்ளார். அதை வைத்து தானே இசையமைத்து, சினிமா பாடலை தனியாக வரி எழுதி புதிதாகவும் பாட முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கோயம்புத்தூர் சென்று இசை பயிற்சி பெற்று வந்துள்ளார். அதுவும் நீண்டகாலம் பயணிக்க முடியாமல் தன் வறுமையின் காரணத்தால் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்படி ஊரில் அவர் பாடிய அந்த பாடலைத்தான் அஜித் மதன் என்பவர் வீடியோவாக எடுத்து சமூக வளைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவே தற்போது அவரது எதிர்காலத்தை மாற்றியுள்ளது.

இதன் தொடர்பாக நக்கீரனுக்கு பேசிய திருமூர்த்தி, முதலில் நான் இமான் சார் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் நீண்ட நாள் கனவு இது, இன்று நினைவாகியுள்ளது. எங்கு நமக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று என்னை நானே கேள்விக்கேட்டுக் கொண்டதுண்டு, அது கனவாகவே போய்விடுமோ!
என்று நினைத்தும் உண்டு, இன்று சந்தோசத்தில் இருக்கிறேன்.

எனக்கு ஒரு கவலைதான், நான் பிறக்கும் போது பார்வையற்றவனாய் பிறந்துவிட்டேன். என் தாய் தந்தையால் எனக்கு பார்வை கொடுக்க முடியவில்லை, ஆனால் எனது கனவான இசைக்கும் பார்வையில்லாமலே போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த எனக்கு அண்ணன் இமான் பார்வைகொடுத்துள்ளார். அன்பு அண்ணன் இமான் அவர்களுக்கு நான் என்ன சொல்லுவது என்றே தெறியவில்லை என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT