viswasam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது. மேலும் இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் கதை கசிந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் கதை ஒன்று உலா வந்தவண்ணம் உள்ளது. அதன்படி... "விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஊருக்கு அடங்காத தாதாவாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் செய்துவைத்தால் மாறிவிடுவார் என்று திட்டமிடும் அவரது நண்பர்கள் தாதா என்பதை மறைத்து பக்கத்து ஊரை சேர்ந்த நயன்தாராவை திருமணம் செய்து வைக்கின்றனர். அஜித்தின் உண்மை முகம் தெரிந்ததும் அவரை பிரியும் நயன்தாரா தனியாக வசிக்கிறார். சொந்தமாக தொழில் செய்யும் நயன்தாராவுக்கு ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அதில் இருந்து அஜித் அவரை எப்படி காப்பாற்றி ஒன்று சேர்கிறார்கள்" என்பதே கதையாம்.