ADVERTISEMENT

''இன்னும் ஒரு வாரத்துல வர்றேன்... வந்தால் சாப்பாடு போடுவீங்களா ''- நெகிழ வைத்த முதல்வர்

11:26 AM Mar 17, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை நேற்று தமிழக முதல்வர் சந்தித்திருந்த நிலையில், இன்று அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் முதல்வர் உரையாடினார்.

வீடியோ காலில் முதல்வரிடம் பேசிய மாணவி, ''நாங்கள் அங்கு வந்து பார்த்த சந்தோஷத்தைவிட நீங்க எங்க வீட்டாண்ட வந்து எங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவோம். எல்லோர்கிட்டையும் சொல்லுவோம் அங்கிள்'' என்றார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ''இன்னும் ஒரு வாரத்துல வர்றேன்... அசெம்பிளி இருக்கு நாளைக்கு... பட்ஜெட்டெலாம் இருக்கு முடிச்சுட்டு வர்றேன்'' என்றார். அப்பொழுது மாணவிகளின் அருகே இருந்த பெற்றோர் ஒருவர் ''நீங்கள் சொல்வதைக் கேட்கும்போதே சந்தோசமாக இருக்குது அய்யா. ஒரு வாரத்துக்கு சாப்பிடவே வேணாம்னு நெனைக்குறோம் அய்யா. எங்க ஊருக்கு வரப்போறிங்களா கேக்கறப்பவே சந்தோசமா இருக்கு. வாங்கய்யா எங்க ஊருக்கு வாங்க... எங்க பசங்கள பாருங்க... எங்க ஏரியாவை பாருங்க...'' எனப் பேச சுற்றி இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்பொழுது 'நான் அங்கே வந்தால் சாப்பாடு போடுவீங்களா' என முதல்வர் கேட்க, 'கறி சோறே போடுவோம்' என்றனர். அப்பொழுது மாணவி, ''அய்யா நாங்கள் படிக்கும் படிப்பு வேஸ்ட் ஆக கூடாது அய்யா, எங்கள் சமூகத்தை எஸ்.டிக்கு மாற்றிக் கொடுங்க அய்யா... இந்த நன்றியையும் சேர்த்து எங்க வீட்டுக்கு வந்தா உங்களை இன்னும் நல்லா கவனிப்பேன் அய்யா'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT