ADVERTISEMENT

“ஆதீனத்திற்குத் தமிழக ஆளுநர் வந்தால் போராட்டம் நடத்துவோம்..” - அரசியல் கட்சிகள் அதிரடி

06:02 PM Apr 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு ஆதீன நிகழ்ச்சிகளை ஆளுநரை வைத்து நடத்தக்கூடாது, எதிர்ப்பை மீறி ஆளுநர் பங்கேற்றால் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் வருகிற 19ம் தேதி ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க உள்ளார். ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்ற அக்கட்சியினர் ஆதீன சந்நிதானம் இல்லாததால் ஆதீன நிர்வாகத்தில் மனுவை ஒப்படைத்தனர். அந்த மனுவில், "ஒன்றிய அரசின் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காகவே தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீரமானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார். நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல. எனவே ஆளுநரை வரவழைக்கக்கூடாது. இந்நிகழ்ச்சியை ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் என தருமபுரம் ஆதீனத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்’ என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. ஜெயராமன், "எதிர்ப்பை மீறி ஆளுநரை அழைத்து ஆதீன நிகழ்ச்சி நடைபெற்றால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்" என அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT