ADVERTISEMENT

"நான் எப்போதும் அதிகமாக பேசமாட்டேன்; செயலில் என்னுடைய பணி இருக்கும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

02:40 PM Nov 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்கள் என்ற எண்ணத்திலேயே தான் உழைத்துக்கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (22.11.2021) நடைபெற்ற அரசு விழாவில் 89 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து 387 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்ட பணிகளைத் தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "நான் இந்த விழாவுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன். சாலையில் இருபுறமும் மக்கள் வரவேற்க குவிந்ததால் இங்கு வர சிறிது கால தாமதம் ஆகிவிட்டது. நான் எப்போதும் அதிகம் பேச மாட்டேன், செயலில் என் பணி இருக்கும். 'பேச்சைக் குறைத்து செயலில் உன்னுடைய திறமையைக் காட்டு' என்ற அடிப்படையில் நம் பணியினை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தை தலைசிறந்த மாவட்டமாக்க பணியினை தொடங்கிவிட்டோம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் என்னுடைய மக்களே, அதில் பாகுபாடு எப்போதும் இருந்ததில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனின் அரசாக திமுக அரசு இருக்கும் என்பதை உறுதியாக உங்களுக்குக் கூறுகிறேன். கோவை நகரில் மத்தியில் உள்ள சிறைச்சாலை நகருக்கு வெளியே அமைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்" என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT