ADVERTISEMENT

"இந்த திட்டத்துக்கான அரசாணையில் நேற்றுதான் கையெழுத்திட்டேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

11:08 AM Jul 27, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் இன்று (27/07/2022) காலை 10.00 மணிக்கு நடந்த விழாவில், பள்ளி மாணவர்களுக்கு உடல் நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 805 வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு தரப்படவுள்ளது.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பள்ளிக் கூடங்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனாவால் தொண்டைப் பாதிக்கப்பட்டாலும், தொண்டு பாதிக்கப்படவில்லை. மாணவர்களைப் பார்க்கும் போது உடல்சோர்வு பறந்து விடுகிறது. அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும். காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட அரசாணையில் நேற்றைய தினம் தான் கையெழுத்திட்டுள்ளேன்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும். பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. படிப்பது, எழுதுவது, எதுவாக இருந்தாலும் எந்த வேலையையும் தள்ளிவைக்காதீர்கள்; படிப்பைத் தவிர வேறு சிந்தனை வேண்டாம். நன்றாக உடல் நலனை பேணுங்கள், நன்றாகப் படியுங்கள்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT