ADVERTISEMENT

''எம்ஜிஆர் காலத்திலிருந்து பார்த்தாச்சு; எனக்கு அந்த பாட்டு போதும்'' - கே.கே.எஸ்.எஸ்.ஆர் கலகல பேச்சு 

08:23 AM Apr 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மருத்துவமனை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மேடையில் பேசுகையில், ''தேர்தல் நேரத்தில் நான் என்னென்ன உங்களிடம் வாக்குறுதி சொன்னேனோ அதை எல்லாம் செய்து கொடுக்கிறேன். ராஜகோபுரம் உங்கள் ஊர் காரர்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்னுடைய பங்கை வைத்து ராஜகோபுரம் கட்டி எல்லோரும் சாமி கும்பிட்டு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும். நீங்களும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். அந்த வேலையை பார்த்து கொடுத்து விடுகிறேன்.

பாளையம்பட்டியில் புதுசாக தேர் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் சொன்னது. அது பழைய தேராக இருந்தது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் தேர். இப்பொழுது அதையும் வேலை பார்த்து இருக்கிறோம். அதற்கும் நான் தான் கூட்டம் போட்டு எல்லாரையும் வரச் சொல்லி, பெரிய ஆட்களை வரச் சொல்லி பேசி, நானும் பணம் கொடுத்து ஊரிலும் ஓரளவுக்கு வசூல் பண்ணுங்க மிச்ச பணம் நான் தருகிறேன் என்று சொல்லி அந்த வேலையும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

பாளையம்பட்டி தேரையும் நான் ஓட்டப் போகிறேன். எல்லாம் உங்கள் புண்ணியத்தில் தான். நானா ஓட்டல. முன்னால் உட்கார்ந்திருக்கிற நீங்கள் எல்லாம் ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைத்ததால் தான். 11 தடவை எனக்கு ஓட்டு போட்டு இருக்கீங்க. இந்த தடவை எனக்கு ஓட்டு போட்டா 12வது எலக்சன் எனக்கு. கல்யாணம் பண்ணுனா பொண்ணுக்கு ஆறு மாசத்தில் நம்மளைப் பார்த்து கோபம் வந்துரும். வேலையை பார்த்துட்டு போயான்னு சொல்வாங்க. ஆனால் 11 எலக்சன்லயும் எனக்கு சலிக்காமல் ஓட்டு போட்டு இருக்கீங்க. என்ன காரணம் யாருக்கோ முகம் தெரியாத ஒரு ஆளுக்கு ஓட்டு போடுவதற்கு முகம் தெரிஞ்ச ஒருவருக்கு ஓட்டு போட்டு விடுவோம். போகும் வழியில் திட்டினாலும் காதுல வாங்கிட்டு போவாரு. அவருக்கு காது கேக்குதோ இல்லையோ தெரியாது ஆனால் நாம் திட்டுகிறோம் அதை காதில் வாங்கிக் கொண்டு போய் கொண்டு இருக்கிறார் என்று சொல்லி தொடர்ந்து எனக்கு ஓட்டு போடுகிறார்கள். அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன்.

நமது பகுதி மக்கள் எல்லாம் முன்னேற வேண்டும். நாங்கள் மந்திரி ஆயிட்டால் ஒன்னும் ராஜா இல்ல. இந்த மந்திரி வரும் போகும். ஆனால் உங்களுடைய உறவு எனக்கு வேண்டும். நீங்களும் நானும் உறவாக இருக்க வேண்டும். நான் எப்பொழுது வந்தாலும் 'நம்ம அண்ணாச்சி வராரு'னு பாட்டு போடுகிறார்கள். அதுதான் எனக்கு வேண்டும். மந்திரி பதவி எத்தனை தடவை பார்த்தாச்சு. எம்ஜிஆர் காலத்திலிருந்து பார்த்தாச்சு. ஆனால் நான் நிகழ்ச்சிக்கு வரும்போது 'நம்ம அண்ணாச்சி வராரு' என்று பாட்டு போடுகிறீர்கள் அந்த உறவு தான் எனக்கு வேண்டும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT