திமுக முப்பெரும் விழா – விருது வழங்கும் விழா 15-ஆம் தேதி விருதுநகரில் நடைபெறவுள்ளது. ‘கழக விருது’ என, தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சிப் பணியில் சிறப்பாகச் செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்றும் பணமுடிப்பும் வழங்கவுள்ளனர்.

Advertisment

இம்முப்பெரும் விழாவில் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றவிருக்கிறார், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். சம்பூர்ணம் சாமிநாதன், கோவை இரா.மோகன், டி.ஆர்.பாலு எம்.பி., சி.பி.திருநாவுக்கரசு மற்றும் குன்னூர் சீனிவாசன் ஆகியோர் விருதுகளைப் பெறவுள்ளனர். விருதுநகர் மாவட்ட அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் வரவேற்புரையும், தங்கம் தென்னரசு நன்றியுரையும் ஆற்றவிருக்கும் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் திட்டமிடலோடு நடந்துவருகின்றன.

Advertisment

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், பெரும் திரளாகத் தொண்டர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் திடலில் இருந்தபடியே, மாநாட்டு பந்தல் அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.