ADVERTISEMENT

''நான் நடிகன் அல்ல... யதார்த்தவாதி''-ஸ்டாலின் பேச்சு! 

07:26 AM Feb 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் மீட்போம், விடியலை நோக்கி, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்புகளில் களமிறங்கியிருக்கும் தி.மு.க. அடுத்ததாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் அமைச்சர்கள், அக்கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளையே குறிவைத்து விளாசத் தொடங்கியிருக்கிறார்.

தென் மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், அம்பை, சங்கரன்கோவில் என்று இலைத் தரப்புகளின் தொகுதிகளே குறிவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாகக் கோவில்பட்டித் தொகுதியை 462 என்று மிகச் சொற்ப வாக்குகளிலேயே தி.மு.க. வாய்ப்பை ஜெ.விடம் பறிகொடுத்து எம்.எல்.ஏ.வாகி, பின்பு அம்மாவின் தயவால் அமைச்சரானவர் கடம்பூர் ராஜ் எம்.எல்.ஏ. அமைச்சர் என்று, 2011 முதல் 2021 வரை அதிகார பீடத்திலிருப்பவர் அமைச்சர் கடம்பூர் ராஜ்.

தென் மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சி, கோவில்பட்டித் தொகுதி என்பதால் ராமநாதபுரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவில்பட்டி வரகால தாமதமாகிவிடுமே என்று முதல் நாள் இரவு கோவில்பட்டி வந்த ஸ்டாலின் அங்குள்ள கே.ஆர். கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்கியவர், மறுநாள் (பிப்.05) காலை ஷார்ப்பாக நிகழ்ச்சியின் ஷ்பாட்டிற்கு வந்து விட்டார்.

போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு. இதற்கு நான் பொறுப்பு என்ற ஸ்டாலினின் வாக்குறுதிகள் டாலடித்தன ஆண்டாண்டு தோறும் மனதில் தோன்றிய வார்த்தைகளால், கற்பனையையும் தாண்டிய அடைமொழிகளோடு தங்களின் கட்சித் தலைவர்களை வரவேற்று நகரமெங்கும் ப்ளக்ஸ்களால் போர்த்தப்படுவது கழகங்களின் தொண்டர்கள் பின் பற்றி வந்த நடைமுறைகள். அவைகள் மக்களால் முகம் சுளிக்குமளவுக்குப் போனதை தி.மு.க.வின் தரப்பில் கவனிக்கப்பட்டதது போல. இந்த ப்ளக்ஸ்களுக்காக் கழகங்களின் தொண்டர்கள், தங்களின் உழைப்பின் பெரும்பகுதியைக் காலி செய்வது மரபாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் இம்முறை ஸ்டாலின் தரப்பில் கட்சித் தொண்டர்களுக்குக் கடுமையான கட்டளைகள். கட்சி நிர்வாகிகள், மற்றவர்கள் தலைவரை வாழ்த்திப் ப்ளக்ஸ்சுகள் வைக்கக் கூடாது. மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிற தலைவரை வரவேற்று 'ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப் போறாராரு...'' என்று ஒற்றை வரியில் மாவட்டக் கழகம் சார்பில் மட்டுமே வரவேற்பு ப்ளக்ஸ் வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஸ்பாட்டிற்கு வந்த ஸ்டாலின் உடனடியாக மேடை ஏறிவிடவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களின் கூட்டத்திற்குள் ஊடரறுத்துச் செல்கிறார். அரைமணி நேரம் பந்தல் மேடையை ரவுண்ட் வந்த ஸ்டாலின் மக்களின் வரவேற்பை ஏற்று பதில் வணக்கம் வைத்து நலம் விசாரித்த போது கூட்டத்தில் ஆரவாரம்.

ஆண்டாண்டு காலம் என்ன நேற்று வரை கழகங்களின் தலைவர்கள் ஏரியா நிகழ்ச்சியில் பொருட்டு வருகிற சமயம், மேடை தாங்காமல் சேர்கள் போடப்பட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களால் ஆக்கிரமிக்கபட்டிருப்பது மரபாகவேபின் பற்றப்பட்டிருக்கிறது. அது போன்று மேடையில் அடை அடையான நிர்வாகிகளின் அமர்வுகள் மக்களின் பார்வையைத் திசை திருப்புவதாகவுமிருந்திருக்கிறது.

இம்முறை மேடையில் அப்படிப்பட்ட சேர் குவிப்புகளில்லை. அத்தனை பெரியமேடையில் ஸ்டாலின் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவர்தவிர அந்த மேடையில் தொடர்புடைய மா.செ. மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற மாறுபட்ட கோணம் அமைப்பு மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அவர்களின் பார்வையில் ஸ்டாலின் மட்டுமே பளிச்சிடுகிறார்.

பக்கவான பொறியியல் தன்மையுடன் அமைக்கப்பட்ட மெகாபந்தலமைப்பு வரும் மக்களை, கட்சியின் நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்களை அமரவைப்பதில் முறையான வடிவமைப்பு இப்படி மக்களால் ஈர்க்கப்பட்ட கட்டமைப்பில் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாசூக்கான அணுகுமுறைகள், என அத்தனை பணியிலும் தி.மு.க.வின் நான் உங்கள் பின்னே (ஐ.பேக்) அமைப்பின் மிளிரல்கள் எதிரொலித் தான்.

இது போன்ற கவரும் தன்மை கொண்ட கட்டமைப்புகளை மனதில் கொண்ட ஸ்டாலின் புன்சிரிப்போடு ''நான் ரெடி நீங்கள் ரெடியா'' என்று மக்களைப் பார்த்துக் கேட்டதில் ஆயிரம் அர்த்தங்கள் வெளிப்பட்டன.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் உங்களை கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நீங்கள் தருகிற மனுக்களுக்கு நம்பருடன் கூடிய ஒப்பதைச் சீட்டு தரப்படும். ஒரு வேளை உங்களின் கோரிக்கை மனுக்கள் கவனிக்கப்படாமல் போகுமேயானால் அந்த நம்பருடன் கூடிய அட்டையை எடுத்துக் கொண்டு என்ன வந்து சந்திக்கலாம். அதில் இடையூறே வராது என்று ஸ்டாலின் நெத்தியடியாகச் சொன்ன போது கூட்டத்தில் ஆரவாரம்.

தொடர்ந்து பெட்டியில் போடப்பட்ட மக்களின் கோரிக்கையின் அட்டைகளை எடுத்தவர் அதிலுள்ள பெயர்களை வாசித்தவர் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசச் சொன்னார்.

கோவில்பட்டியின் பார்வதி என்ற இளம் பெண் தங்கள் பகுதிக்கு வரும் குடி தண்ணீரில் உப்பு மற்றும் கேல்சியத் தன்மையோடு வருவதால் அதை அருந்துகிற எங்கள் பகுதிமக்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைச் சொன்ன போது,

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது உலக வங்கயின் நிதி உதவியுடன் ஒகேனேக்கல் கூட்டுக் குடிநிர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பத்துமாதத்தில் குடிநீர் திட்டம் முடிக்கப்பட்டது. ஆட்சி வந்ததும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

அடுத்து தூத்துக்குடியின் ராபர்ட், நாட்டுப்படகுத் தொடர்பான பிரச்சினை தூண்டில் வளைவு முடக்கப்பட்டது பற்றித் தெரிவித்தவருக்கு உத்தரவாதம் கொடுத்தார் ஸ்டாலின். இது போன்று சாம்பிளுக்கு பலரின் மனுக்கள்பற்றி தெரிவிக்கப்பட்டு உரிய நிவாரண உறுதியையும் தந்தார் ஸ்டாலின்.

இங்கே அமைச்சராகவும் எம்.எல்.ஏ.வாகப் பத்து வருடங்கள் அதிகாரத்திலிருந்தவர் கடம்பூர் ராஜ். தொகுதிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாரா? கலைஞரால் இந்த நகருக்குக் கொண்டு வரப்பட்ட 2 வது பைப் லைன் முற்றுப் பெறாமலா முடக்கப்பட்ட நிலைதானே என்று பஞ்ச் வைத்த ஸ்டாலின்,

23 வது வயதில் மிசா கொட்டடியில் அடைக்கப்பட்டவன் 1993-ல் குடி நீருக்கான போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறேன். மொழிப் போர் காலத்தில் பல முறை கைது செய்யப்பட்டடு சிறை, இப்படி சிறை வாழ்க்கைப் பின்னணியில் வந்தவன் தான் ஸ்டாலின். தேர்தலுக்காக விவசாயி மகன் என்று அவர்தான் நடிக்கிறார் என்னை நடிகன் என்று சொல்கிறார்.

நான் நடிகன் அல்ல... யதார்த்தவாதி என்று விளாசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT