ADVERTISEMENT

‘ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க வேண்டும்’ - விவசாயிகள் கோரிக்கை!

10:47 AM Dec 17, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படாது என மாவட்ட நிர்வாகமும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரும் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், மீண்டும் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் என்பது டெல்டா பகுதிகளில் வருகிறது. மேலும், அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கப்பட்டால், புதுக்குடி குருவாலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களில் வேளாண் நிலங்களும் அருகில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களும், கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இராசேந்திர சோழனின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரி உட்பட பல்வேறு நீர்நிலைகள் வரண்டுவிடும் நிலை ஏற்படும்.

புதுக்குடி கிராமங்களில் ஆயிரக்கணக்கான கிணறுகள் உள்ளன. அவற்றில் தண்ணீர், தேன் போன்ற அருமையான சுனை நீர் ஆகியவை உள்ளன. அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவருகின்றனர் விவசாயிகள். ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தால், புதுக்குடி கிராமங்களில் நீரூற்றுகள் அழிக்கப்படும் நிலை உருவாகி, விவசாயிகள் விவசாயம் செய்வதை விடுத்து ஊரைக் காலி செய்யும் நிலை உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டினை அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT