ADVERTISEMENT

கணவனின் முறையற்ற தொடர்பு... ஊரையே அலறவிட்ட மனைவியின் செயல்!

01:17 PM Apr 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

சென்னையில் மணலியில் கணவன் முறையற்ற தொடர்பிலிருந்ததை கண்டித்த மனைவி கதவை தாழிட்டுக்கொண்டு சமையல் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அந்த பகுதி மக்களை அலறவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

சென்னை மணலி ஈ.வே.ரா பெரியார் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் கண்ணா-ரேணுகா தம்பதியினர். மதுரையைச் சேர்ந்த ரேணுகாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் கண்ணா திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரமேஷ் கண்ணா ஒரு ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். ரேணுகா வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்திவந்தார். ரமேஷ் கண்ணா அண்மை காலமாக வேறொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரமேஷ் கண்ணா-ரேணுகா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரேணுகாவுக்கும் கணவன் ரமேஷ் கண்ணாவிற்கும் இடையே முறையற்ற தொடர்பு குறித்து மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரேணுகா அறையின் கதவை தாழிட்டுக்கொண்டு அறையில் இருந்த மூன்று கேஸ் சிலிண்டர்களை திறந்து வைத்துள்ளார். அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்ட ரேணுகா தனக்கு நீதிவேண்டும் என சொல்லியபடி கதவை திறக்க மறுத்தார்.

இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் ரேணுகா கதவை திறக்கவில்லை. இதனால் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற நிலையில் 108 ஆம்புலன்ஸ்-ம் கொண்டு வரப்பட்டது. மேலும் ரேணுகா இருந்த வீட்டை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக போலீசாரின் அறிவுறுத்தல்படி வெளியேற்றப்பட்டனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த மணலி கவுன்சிலர் ரேணுகாவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, ரேணுகாவின் தாய், உறவினர்கள் என யார் பேச்சும் எடுபடாமல் போனது. மதியம் சுமார் 12 மணிக்கு கதவை தாழிட்ட ரேணுகா இரவு 8 மணிவரை கதவைத் திறக்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் அவர் இப்படித்தான் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வதாக பூச்சாண்டி காட்டுவார். நாங்களே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகிறோம் என ரவுத்திரமாக பேச தொடங்கினர். இனியும் பொறுக்கமுடியாது என முடிவெடுத்த போலீசார் தண்ணீரை பீச்சி அடித்துக்கொண்டே கதவை உடைத்தனர். உள்ளே மயங்கிய நிலையில் இருந்த ரேணுகா மீட்கப்பட்டார். ரேணுகா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT