ADVERTISEMENT

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்; 40 பேர் மயக்கம்

08:19 AM Dec 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மூன்றாவது நாளாக இன்றும் போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இரவு பகலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இதுவரை யாரும் தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி முதல் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கும் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கக்கூடிய ஊதிய வேறுபாட்டை களைய வேண்டும் என்றும், இரண்டு தரப்பு ஆசிரியர்களும் ஒரே பணியை செய்யும் நிலையில் ஊதிய வேறுபாட்டை களைவது தொடர்பாக தமிழக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் மூன்றாவது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT