ADVERTISEMENT

அரிவாளைக் கையில் வைத்திருந்தார் எச்.ராஜா! வெட்டினார் கருணாஸ் -அமைச்சரின் ‘அடடே’ விளக்கம்!

08:44 PM Sep 25, 2018 | cnramki

ராஜபாளையம் – சத்திரப்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலத்துக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அப்போது, ஒரு கண்ணில் வெண்ணெய்! இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா? என்கிற ரீதியில், எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தை தமிழக அரசு கையாண்டிருக்கிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் அவர் -

ADVERTISEMENT

ADVERTISEMENT

“தமிழ்நாடு அரசு ஒன்றும் பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை. கருணாஸ் பேசிய வார்த்தையின் வீரியம் ரொம்ப அதிகம். கொடூரமானது. யாரும் யாரையும் கொல்லனும்னா என்கிட்ட சொல்லிட்டுக் கொல்லுங்க. கொலை செய்யுங்கன்னு ஒரு கடுமையான வார்த்தையை, சட்ட மன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர், விதிகளுக்கு உட்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பதவியேற்றவர், என்கிட்ட கேட்டுட்டு, சொல்லிட்டு, கொலை செய்யுங்கன்னு சொல்லலாமா? பிற சமுதாயத்தை அச்சுறுத்துற மாதிரி நடக்கலாமா? அதனாலதான், அவரு மேல நடவடிக்கை உடனே பாய்ந்தது. மற்றவர்களும் தவறு செய்திருந்தால், அது விசாரணையில் இருக்கும். காவல்துறை விசாரணையில் இருக்கும். கோர்ட் அனுமதியைப் பெறுவார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிவாளைத் தூக்கி கையில் வச்சிருந்தவனுக்கும், அரிவாளால வெட்டியவனுக்கும் வித்தியாசம் இல்லியா? அரிவாளைக் கையில் வச்சிருக்கிறவனை பதறாம பிடிச்சிக்கலாம். வெட்டுறவனைத்தான் மொதல்ல பிடிக்கணும். இவரு வெட்டுவேங்கிறாரு. வெட்டிட்டு வாங்கன்னு சொல்லுறாரு. என்கிட்ட கேட்டுட்டு வெட்டுங்கிறாரு கருணாஸ். கருணாஸ் வந்து எப்படி இருந்தாரு? எப்படி வாழ்ந்தாரு? நான் செய்தித்துறை அமைச்சரா இருக்கும்போதே தெரியும். அவரு வந்து அம்மாவால் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளரா திருவாடனைல நிற்கும்போது, எனக்கு ஒத்துழைப்பே இல்லைன்னு கதறினாரு. இப்ப என்னடான்னா, ஜனாதிபதிய நான்தான் ஜெயிக்க வச்சேங்கிறாரு. இவரோட ஓட்டுலயா அவரு ஜெயிச்சாரு. எல்லாரும் ஓட்டு போட்டோம். நாங்களும் ஓட்டு போட்டோம். என்னுடைய பங்களிப்பு இருக்குன்னு சொல்லலாம். நான்தான் ஜனாதிபதியை ஜெயிக்க வச்சேன்னு சொன்னா, அவ்வளவு பெரிய அதிகாரமா இவருக்கு இருக்கு? கருணாஸுன்னு பேர் இருந்தாலே வந்து, ஈழத்துல ஒரு கருணா இருந்தான். இப்படித்தான் தமிழர்களைக் காட்டிக்கொடுத்துட்டு.. தமிழர்கள் ரெண்டு லட்சம் பேரு இறப்புக்கு காரணமா இருந்தான். இப்ப எல்லா சமுதாயமும் இணக்கமா இருக்கு. மெட்ராஸ்ல எல்லாரும் இணக்கமா இருக்காங்க. அங்க வந்து தீயைக் கொளுத்திப் போட்ட மாதிரி போட்டு, எப்படியாச்சும் ஒரு கலவரத்தை உண்டாக்கினா.. எப்படியாச்சும் முதலமைச்சர் எடப்பாடி அண்ணனோட அரசுக்கு, ஒரு கெட்ட பேரு உண்டாக்கலாம்கிற ஒரு கோணத்துல, பல்வேறு வழியிலிருந்தும் ஒரு ஏவுகணை தாக்குதல், அரசியல் தாக்குதல், அதிகார வரம்பை மீறி தாக்குதல், நடந்துக்கிட்டிருக்கு. இந்தத் தாக்குதலையெல்லாம் சமாளிச்சுத்தான், எடப்பாடி அண்ணன் ஆட்சியை நடத்தி வர்றாரு. இந்த ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. ரெட்டை இலை மகிமை இன்னும் போகல. 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்கும்.” என்றார் அதிரடியாக.

எச்.ராஜா, கருணாஸ்.. இருவருமே வாய்ப்பேச்சில் வீரம் காட்டினார்கள். வரம்புமீறி பேசினார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு அஞ்சி, எச்.ராஜாவின் குற்றத்தை மட்டும், தங்களுக்கு வசதியாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, என்னமாய் வெண்டைக்காய் விளக்கம் தந்திருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT