ADVERTISEMENT

670 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்படும்; முதல்வர் உறுதியளிப்பு

09:43 PM Nov 15, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வால்பாறையில் தமிழக தேயிலைத் தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் 600க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் டேன் டீ தொழிற்சாலைகள் மூடப்படும் என அரசு அறிவித்தது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இதன் பின் இப்பிரச்சனைகள் குறித்து முதல்வரைச் சந்தித்துப் பேசுகிறேன் என்றும் தொழிலாளர்களிடம் உறுதியளித்தார்.

இந்நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமானும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர்.

பின்னர் இது கூறித்து திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தாயகம் திரும்பிய தமிழர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே டேன் டீ என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்தது. தற்போது அந்நிறுவனத்தில் பணியாற்றிய பலர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் நலன் காக்க இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டைமான் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஓய்வு பெற்ற 670 குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் அரசு கவனித்துக் கொள்ளும் என்ற உறுதியைத் தந்துள்ளார்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT