ADVERTISEMENT

ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து 3500 கன அடியாக அதிகரிப்பு!

08:37 AM Jun 14, 2020 | rajavel




காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, மாதந்தோறும் கர்நாடகா மாநிலம் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த 8ம் தேதி, அம்மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ADVERTISEMENT


இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால், ஒகேனக்கல் காவிரியிலும் நீர் வரத்து குறைந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று (ஜூன் 12) ஒகேனக்கல் வந்து சேர்ந்தது.

ADVERTISEMENT


நேற்று முன்தினம் மாலை, நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 1500 கன அடியாக உயர்ந்தது. படிப்படியாக அதிகரித்து மாலையில் 3500 கன அடியாக நீர் வரத்து இருந்தது.


அதேபோல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 1439 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 101.73 அடியாகவும், நீர் இருப்பு 67.10 டிஎம்சி ஆகவும் இருந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT