Skip to main content

காவிரிக்காக போராடியவர் மீது குண்டர் சட்டம்!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018


 

Cuddalore


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 10.4.2018 அன்று இரவு கர்நாடக அரசு பேருந்து கடலூரில் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக மாநில் பெல்காம் மாவட்டம், அறிமந்திராவை சேர்ந்த  பசவராஜ் என்பவர்  கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
 

அதனடிப்படையில் நாம்  தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், சாமி ரவி, கோண்டூர் ராஜா, சாமியார்பேட்டை தனசேகர், கடலூர் 0T நாராயணன், அழகியநத்தம் சுரேஷ், பச்சையாங்குப்பம் நாராயணசாமி ஆகியோர் சட்ட விரோதமாக ஒன்று கூடி பஸ்ஸை வழிமறித்து,  அசிங்கமாக திட்டியும், பஸ் கண்ணாடியை உடைத்தும், பொது சொத்தை சேதபடுத்தியும், கொலை மிரட்டல் விடுத்ததாக கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணன் விசாரணை மேற்கொண்டு கைது செய்து, அதன்பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கடல்தீபன் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும், பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும்  கூறி கடலூர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி கடல்தீபனை  குண்டர் தடுப்பு காவலில்  சிறையில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ஒராண்டு மத்திய சிறையில் வைக்கப்பட்டார். 
 

மேலும் அரசு மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவோர் மீது குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்படுவர் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
 

தமிழ்நாட்டு உரிமைக்காக போராடியர்களை குண்டர் எனக்கூறி தடுப்பு காவலில் சிறைப்படுத்துவதென்பது தமிழ்நாட்டு உரிமைக்காக போராடுபவர்களை மிரட்டுவது போன்றது என்றும், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காக அதற்குரிய சட்ட பிரிவுகளில் கைது செய்து வழக்கு விசாரணை நடைபெறும்போது தடுப்புக்காவலில் சிறைப்படுத்துவது தமிழர் உரிமைக்காக போராடுபவர்களை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசின் சர்வாதிகார போக்கையே பிரதிபலிக்கிறது என தமிழார்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மைசூர் விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிப்பு; கடலூர், சிதம்பரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
people are happy as the Mysore Express has been extended to Cuddalore

கடலூர் மாவட்டத்தில் கடலூர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகவும், சிதம்பரம் நகரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்,  நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம் எனச் சிதம்பரம் சுற்றுலா மற்றும் ஆன்மீக நகரமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாகக் கோயம்புத்தூர், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு போதிய ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் வணிகர்கள், அரசு, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயில், மயிலாடுதுறை கோவை ஜென் சகாப்தி விரைவு ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர், சிபிஎம், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்  மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இதற்கு ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உண்ணாவிரதம், ரயில் மறியல், கோரிக்கை முழக்கப் போராட்டம் என முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமையில் இது குறித்து 2 கட்ட அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 7-ஆம் தேதி ஜென்சதாப்தி, மைசூர் ரயிலைக் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலால் ரயிலை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் அறிவித்த ரயிலை உடனே இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தக சங்கத்தினர் சார் ஆட்சியரைச் சந்தித்து ஜூன் மாதம் கடிதம் அளித்தனர்.

இதனையொட்டி நீண்ட கால பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுத் தென்னக ரயில்வே முதல் கட்டமாக மயிலாடுதுறை - மைசூர் 16231/ 16232 விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையறிந்த சிதம்பரம், கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடலூர் துறைமுகத்தில் ரயில் பெட்டிகளுக்குத் தண்ணீர் நிரப்பும் வசதி, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியவர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் மயிலாடுதுறைக்குக் காலை 7 மணிக்கு மைசூர் ரயில் வரும் 7.05 கடலூர் துறைமுகத்திற்கு புறப்பட்டுச் செல்லும் முதல் நாள் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படும் அடுத்த நாள் தான் நேரம் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

Next Story

காவிரியில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Further increase in release of water in Cauvery

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து தொடங்கி தற்போது விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை கர்நாடக அணைகளில் இருந்து 23,912 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று மாலை நேரத்தில் மொத்தமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 36,579 கன அடியாக அதிகரித்துள்ளது.