ADVERTISEMENT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்... எழும் அடுக்கடுக்கான கேள்விகள்!!

07:13 PM Dec 26, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் என தெரிந்தே ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் கொடுத்த இளைஞர் பற்றிய தகவல்களும், அவர் தற்கொலை குறித்த செய்திகளும்,

கமுதி திருச்சிலுவையை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிவகாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் உறவுக்கார பெண்ணுக்கு ரத்தம் கொடுக்க முன்வந்த நிலையில், அந்த இளைஞர் வெளிநாடு செல்ல இருந்ததால் மதுரை வந்த அவருக்கு மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்பட நேர்ந்தது. அந்த பரிசோதனையில் அவரது ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது உறுதியாக உடனே சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.

இதனை அடுத்து ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை உங்கள் உறவுகார பெண்ணுக்கு செலுத்தவில்லை. அந்த ரத்தம் சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளனர் மருத்துவ ஊழியர்கள். ஆனால் இதற்கிடையில் சாத்தூரில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணக்கு செலுத்தப்பட்டுள்ளது ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் என தெரிந்தும் ரத்தம் செலுத்தப்பட்டதா? என பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தெரியாமல் நடந்த ஒன்றா? அல்லது தெரிந்தே நடந்த அலட்சியமா? மேலும் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது என்ற தகவல் சம்பந்தப்பட்ட இளைஞர் மூலம் தெரியவர சிவகாசி மருத்துவ நிர்வாகம் சாத்தூர் மருத்துவமனைக்கு தெரிவிக்க வில்லையா? அந்த ரத்ததை உபயோகிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை கொடுக்கவில்லையா? என பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை கொடுத்த கமுதி திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த அந்த 21 வயது இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டுள்ளார்.

அதாவது ரத்தத்தில் தொற்றுள்ளது தெரிந்து சம்பந்தபட்ட நபர் மருத்துவமனைக்கு தெரிவித்ததும், அந்த ரத்தம் சிவகாசி மருத்துவமனையில் இருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளது. அங்கு ரத்தத்தை ரிசீவ் செய்த ஊழியர்கள் அதை வாங்கிய பின்னர் அதனை தொற்றுள்ள ரத்தம் என வகைப்படுத்தவில்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT