ADVERTISEMENT

விருப்பம் இல்லாவிட்டாலும் இந்தி! -தமிழக ஜி.எஸ்.டி உதவி ஆணையர் புகார்!

05:56 PM Sep 07, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் உணர்வைச் சிறுமைப்படுத்தும் நோக்குடன் இந்தி பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி அலுவகத்தின் உதவி ஆணையர் புகார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி அலுவலக இந்தி பிரிவில், இந்தி தெரியாத தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஜி.எஸ்.டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் என்பவர் மத்திய அரசின் மறைமுக வரிகள் வாரியத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியைப் பரப்ப வேண்டும் என்று நினைப்பது கூட இந்தித் திணிப்புதான் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியை தாய்மொழியாகக் கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் திட்டமிட்டு எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வைச் சிறுமைப்படுத்தும் நோக்குடன் இந்தி பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி அலுவலக இந்தி பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தி தெரியாதவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் திரையுலகினர் டி-ஷர்ட் மூலமாக இந்தித் திணிப்பு தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஜி.எஸ்.டி ஆணையர் தற்பொழுது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT