ADVERTISEMENT

முதல்வர் இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் கொண்டாட வலியுறுத்தும் போது அமைச்சர் ரகுபதி கல்லூரியில் இந்தி தினம்!

09:25 PM Sep 21, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செப்டம்பர் 14 இந்தி திவாஸ் (இந்த தினம்) கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில்... உள்ளூர் மொழிகள் பாதுக்காக்கபட வேண்டும் என்றால் அரசியல் சாசன 8 வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையாக அலுவல் மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஒரு மொழிக்குறிய நாளில் அதன் சிறப்புகளையும், பெருமைகளையும் எடுத்துரைப்பது இயல்பானது தான். ஆனால் கலாச்சாத்தையும் பண்பாட்டையும் புரிந்து கொள்ள இந்தி கற்க வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் இந்திய ஒன்றியத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானதாக உள்ளதாக கூறியிருந்தார்.


இந்த நிலையில் தான் புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியில் ஜெ.ஜெ கல்லூரியில் நேரு யுவகேந்திரா மற்றும் அன்னை இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து இந்தி திவஸ் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் இந்திய மொழிகள் தினம் கொண்டாட வலியுறுத்தும் போது அமைச்சர் ரகுபதியின் கல்லூரியில் இந்தி தினம் கொண்டாடியிருப்பதை சர்ச்சையாக பேசி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT