ADVERTISEMENT

தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம்!! உயர்நீதிமன்றம் உத்தரவு!

06:35 PM Jun 23, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப்போக்கு ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவ சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழக்க, அவரது தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உடற்கூறாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT