ADVERTISEMENT

கனமழை எதிரொலி; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

07:26 AM Feb 03, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக் குறைந்து தெற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றி வைத்திருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி சில மாவட்டங்களில் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி திருவாரூர், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கனமழை காரணமாக மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாகையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT