ADVERTISEMENT

கணினி பாடத்தை உருவாக்கிய இதயம் நின்று விட்டது - கணினி ஆசிரியர்கள் குடுபத்தினர் இரங்கல்!

10:10 AM Aug 11, 2018 | rajavel


அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கலைஞர்...அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கலைஞர்..

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என என்னி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர இன்று உறங்கு கின்றார்..

ADVERTISEMENT

சமச்சீரில் கணினி பாடம்...

தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டின் மே மாதம்

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை.

ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் அஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்டாரே..

"அறிக்கை தந்த சூரியனுக்கு ஆழ்ந்த இரங்கல்"

நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது.

கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிழப்பு...

கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு...

கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

என்றும் நன்றியுடன்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மற்றும் உறுப்பினர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT