ADVERTISEMENT

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குளத்தினை தூர்வாரும் 'பசுமை விருத்தாச்சலம்' அமைப்பு!

10:40 AM Jul 19, 2019 | kalaimohan

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மழை நீரை சேமிக்க வேண்டும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு 'பசுமை விருத்தாச்சலம்' எனும் இயக்கம் தொடங்கப்பட்டு நகரின் பல்வேறு இடங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இச்செயலை பொது மக்கள் பலரும் பாரட்டி வரும் நிலையில், அடுத்த கட்ட முயற்சியாக விருத்தாச்சலம் பெரிய நகரில் அமைந்துள்ள நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட நாச்சியார் குளத்தை பசுமை விருத்தாசலம் இயக்கம் சார்பில் தூர்வாரும் பணியினை சார் ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.


இத்தூர் வாரும் பணியின் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டை முழுவதாக போக்க முடியும் என்றும், குளத்தை தூர் வாரிய பின்பு கரைகளில் பூங்கா அமைக்கப்படும் என்றும், வருங்காலங்களில் விருத்தாசலத்தை பசுமை நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் விருத்தாசலத்தில் உள்ள கஸ்பா, வயலூர் உள்ளிட்ட ஏரிகளையும் அடுத்த கட்டமாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், பசுமை விருத்தாசலம் இயக்கத்தை சேர்ந்த அனைவரையும் வெகுவாக பாரட்டினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் கவியரசு, நகராட்சி ஆணையர் பாலு, பசுமை விருத்தாசலம் இயக்கத்தின் தலைவர் தியாக.இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT