Saidapet railway station incident

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை அரக்கோணத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளைஞர் ஒருவர் இன்று நேர்காணலுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்னை கிளம்பியுள்ளார். இந்நிலையில் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி இன்று மதியம் 3 மணியளவில் வந்த மின்சார ரயில் சைதாப்பேட்டையில் நிலையத்தின் நடைமேடையில் வந்துகொண்டிருந்தது. அப்போது நடை மேடையில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர் திடீரென ரயில் முன்பு பாய்ந்துதற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

உடனடியாக மாம்பலம் ரயில்வே போலீசார் இளைஞர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவருடைய உடைமைகளைச் சோதனை செய்தபோது கிடைத்த ஆதார் அட்டையில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்துத்தகவல் தெரிவித்துள்ளனர். அவருடைய பெயர் விஜய ராஜாராம் என்பது தெரியவந்தது. நங்கநல்லூரைச் சேர்ந்தஅவர்பி.இ., எம்.இ.,படித்துள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வாரத்தில் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேர்முகத்தேர்வுக்குக் கிண்டிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வந்தவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சமோசா, பழ வியாபாரம் செய்து வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது நிகழ்ந்த தற்கொலைச் சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment