ADVERTISEMENT

தண்ணீர் ஏ.டி.எம்... தண்ணீருக்காக தனியார் நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை...

09:07 PM Oct 04, 2018 | arulkumar

ADVERTISEMENT

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 இடங்களில் 300 சதுர அடியில் ஏ.டி.எம் அமைத்து தண்ணீர் விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களிடம் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கோவையில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 இடங்களில் 300 சதுர அடியில் இடம் ஏ.டி.எம் அமைத்து தண்ணீர் விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் போர் போட்டு நிலத்தடி தண்ணீரை எடுத்து தனியார் நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருக்கின்றது, மாநகராட்சியின் இந்த முடிவு மக்களிடம் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். 1500 பொது குழாய்களை மூடிவிட்டு அங்கு தண்ணீர் ஏ.டி.எம் அமைப்பது என்பது சரியானதல்ல, தண்ணீருக்காக தனியார் நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றது. சூயஸ் நிறுவனத்திற்கு கான்டிராக்ட் விட்டது, சென்னை கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் போன்றவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 15 மாணவர்கள் இருக்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். வானிலை மையம் 12 சதவீதம் வடகிழக்கு பருவ மழை கூடுதலாக இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள்.


வானிலை அறிவிப்பு வெளியாகியும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு பின்பாவது தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் நடைபெறும் நிலையில், இரண்டாவது யூனிட்டை திறக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தஞ்சை சாஸ்திரா பல்கலை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்பதில் அரசு பாரபட்சம் காட்டுகின்றது எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT