ADVERTISEMENT

"பா.ஜ.க.வின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர்  செயல்படக் கூடாது"- துரை வைகோ பேட்டி!

07:20 PM Oct 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, தேனியில் 'மாமனிதன் வைகோ' ஆவணப்படத்தை கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் திரையரங்கில் பார்த்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ, "மாமனிதன் வைகோ ஆவணப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் நாற்பது திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

அப்போது அவரிடம் திருக்குறள் குறித்து ஆளுநர் பேச்சு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "தமிழக ஆளுநர் பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். திருவள்ளுவரை உலகம் முழுவதும் பெருமையாகப் பேசப்பட்டு வருகின்றனர். அவருக்கு காவி நிறம் பூசுவது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைப்பது ஏற்புடையதல்ல. அவர் ஆளுநராக செயல்படாமல், அரசியல் செய்து வருகிறார். இனியும் ஆளுநர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படக் கூடாது" என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியானது முதல் ராஜராஜ சோழன் இந்துவாக காட்டப்பட்டதாகப் பேசப்பட்டு வருகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "தென்கிழக்கு ஆசியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராஜராஜ சோழன். தமிழர்களின் பெருமையாக கருதப்படும். ராஜராஜ சோழனை திருவள்ளுவரைப் போல் மதத்திற்கும், சுருங்குவது மதத்திற்குள் அடக்குவது மளிவான அரசியல். ராஜராஜ சோழன் பெருமையை மறந்துவிட்டு கீழ் தரமான அரசியல் தான் தற்போது நடைபெறுகிறது.

தமிழகத்தில் மத அரசியலுக்கு இடம் கிடையாது. முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை கேரள அரசு நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுகிறது. அதற்கு ஒன்றிய அரசும் துணை போகிறது. அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் படி, கேரள அரசு ஈடுபட்டால், ம.தி.மு.க. களத்தில் முதல் ஆளாக இறங்கி போராடும்" என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT