ADVERTISEMENT

“கஞ்சா கடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது” - அமைச்சர் முத்துசாமி

09:55 AM Mar 16, 2024 | ArunPrakash

ஈரோட்டில் 26.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள வ.உ.சி பூங்காவை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால், சுங்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை ரூ.15 கோடியில் முதல்வர் அறிவித்தார். கூடுதல் நிதி திரட்டி அரசு மற்றும் தனியார் தனியார் கூட்டு முயற்சியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். திட்டத்திற்கு சிறந்த கட்டிடக்கலை நிபுணர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் விரைந்து நடைபெறும்.

ADVERTISEMENT

ஈரோடு சோலார் பகுதியில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை சந்தை அமைக்க ரூ.20 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்தார். இது அனைத்து வசதிகளுடன் வரும். அங்குள்ள 20 ஏக்கர் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும். ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 13.5 ஏக்கர் நிலப்பரப்பில் மற்றொரு வெளியூர் பேருந்து நிலையம் வரவுள்ளது. மாநிலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது

திமுகவில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். ஒன்று அல்லது இருவர் தவறு செய்தால், ஒட்டுமொத்த கட்சியையும் அல்லது அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியாது. கட்சி கவனத்திற்குக் கொண்டு வரும் போதெல்லாம் தவறுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கஞ்சா கடத்துபவர்கள் மீது அரசும், திமுகவும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT