ADVERTISEMENT

சமுதாய உணவு கூடங்களுக்கு மத்திய அரசு முழுமையாக நிதி வழங்க வேண்டும்! டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு!!

10:28 PM Dec 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அம்மா உணவகம் போல சமுதாய உணவு கூடம் அமைக்கும் திட்டத்திற்கு பாத்திரங்கள், உணவு, தானிய கொள்முதல் உட்பட அனைத்து செலவுத் தொகையையும் மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாதிரி சமையல் கூடம் திட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த உணவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர் அது போல் தமிழக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியும் கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, " தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பொது வினியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக 650 சமுதாய உணவகங்களில் வேலைகளுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது இதேபோன்று சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள விருப்பது மகிழ்ச்சி உணவு திட்டங்களுக்கான நிலத்தை மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும். அடுத்ததாக கட்டடம் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை செலவுகள் மற்றும் உணவு தானிய கொள்முதல் பணியாளர் சம்பளம் போக்குவரத்து உள்ளிட்டவற்றை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

இது ஏழைகளுக்கான திட்டம் என்பதால் பயனாளிகள் அடையாளம் காண அளவுகோல் தேவையில்லை இத்திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இயற்கை பேரிடர் காலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவே போதிய உணவு வழங்க இத்திட்டத்தில் நிகழ்வை இருப்பதுடன் குறைந்தபட்சம் இரு வேளை உணவு வழங்க வேண்டும் அதற்கேற்ற வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் படி ஒன்றிய அரசுடன் இணைந்து பசிப்பிணி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT