ADVERTISEMENT

மாணவர்களுக்கு இன்ட்ராநெட் முறையில் பாடம் நடத்த வேண்டும்... ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை!

05:17 PM Sep 03, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


ஆன்-லைன் வகுப்புகளை இன்டர்நெட் முறையில் அல்லாமல் இன்ட்ராநெட் முறையில் கற்பிக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன் – லைன் வகுப்புகள் பல விளவுகளை ஏற்படுத்தும் என்று தொடர்ச்சியாக அனைத்து மக்கள் அரசியல் கட்சிசார்பாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் அவர்களின் மகள் நித்தியஸ்ரீ ஸ்மார்ட் ஃபோன் வாங்க இயலாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டு மரணம் அடைந்ததை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

மாற்று வழியாக இன்ட்ராநெட் (intranet தனியார் இணையம் எனலாம்) முறையில் கல்வி கற்பிக்கப்படலாம். இன்ட்ராநெட் முறையில் பல நன்மைகள் உள்ளன. Dataவிற்கு ஆகும் செலவு முற்றிலுமாக இல்லாமல் போகும் வேறு எந்தவித இடையூறுமின்றி (ஆபாச வெப்சைட்கள், ஆன்லைன் விளையாட்டுகள்) இன்டர்நெட் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாடங்கள் கற்க முடியும்.

இதற்கு அரசு Router வசதிகளை அனைத்து பகுதிகளிலும் பொருத்த வேண்டும். அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் முயற்சியால் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் Trainingtek LLC, Chicago based IT & eduction நிறுவனர் திருமதி.கல்பனா பாரிதாஸ் இலவசமாக சாஃப்ட்வேர் வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த இன்ட்ராநெட் முறை பள்ளி மூடப்பட்ட சூழ்நிலையில் மட்டுமல்லாமல் இயல்பான நிலையிலும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக TAB வழங்கவேண்டும். அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் கல்வி முறை அமையவேண்டும். பாகுபாடற்ற முறையை ஏற்படுத்த அரசு வழி வகை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT