ADVERTISEMENT

“அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது” -சட்டத்துறை அமைச்சர் சண்முகம்

05:09 PM Oct 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கல்லூரி பயிலும் சுயதொழில் புரியும் 45 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்ஃபோன் பழுது, செவித்திறன் குறைபாடுடைய 10 பேருக்கு நவீனக் கருவிகளும், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து ஆராயப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதை சட்டப்பேரவையிலும் இதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு பாதகம் விளைவிக்கும் எந்த செயலையும் அரசு ஏற்றுக்கொள்ளாது.

பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள சரத்துக்கள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டு வந்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க கூறியபோது விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டு நாங்களே நிதியாதாரம் திரட்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் எந்தவகையில் அவர் நிதி ஆதாரத்தை திரட்டுவார் என தெரியவில்லை. துணைவேந்தரின் இந்த ஒழுங்கீன நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது” என்று கூறினார் அமைச்சர் சண்முகம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT